கோவை தெலுங்குபாளையம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கோவை: கோவை தெலுங்குபாளையம் 74 வது வார்டு பகுதியில், அதிமுக வார்டு செயலாளராக உள்ளவர் கதிர்வேல். இவரது சகோதரரான, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அன்பழகன் என்பவர் ராஜேஸ்வரி கார்டன் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

கோவை: கோவை தெலுங்குபாளையம் 74 வது வார்டு பகுதியில், அதிமுக வார்டு செயலாளராக உள்ளவர் கதிர்வேல். இவரது சகோதரரான, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அன்பழகன் என்பவர் ராஜேஸ்வரி கார்டன் பகுதியில் குடியிருந்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், அன்பழகன் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த அவரது ஹோண்டா ஷைன், இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து உள்ளனர். இதில், இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

இது குறித்து அன்பழகன் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்கபட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...