கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலையை அகற்றுவதாக பரவிய தகவலையடுத்து இந்து அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

கோவை: கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலையை அகற்றுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை தொடர்ந்து இந்து அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலையை அகற்றுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை தொடர்ந்து இந்து அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் சூலூர் சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சிறிது காலத்திற்கு முன்பு வரை சலவைத் தொழிலாளிகள் துணிகளை துவைத்து வந்தனர். அங்கு அவர்கள் வழிபடுவதற்கு விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.

பின்னர் கால மாற்றத்தின் காரணமாக சலவை தொழிலாளிகள் அதிக அளவில் அப்பகுதியில் வராததால் அந்த பகுதியை சூலூர் வட்டம் உருவான போது வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அந்த இடம் தேர்வானது. அப்போது இருந்து அந்த சிலையை வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் வழிபட்டு வந்தனர்.

இதனை சிலர் ஆட்சேபனை செய்ததன் காரணமாக சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி சிலையை அப்பகுதியில் இருந்து எடுத்து விட கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சிலையை அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. விநாயகர் சிலை அகற்றுவதாக சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்து அமைப்பினர் அப்பகுதியில் அதிகளவில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதனையடுத்து, அப்பகுதிக்கு சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி, கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி, சூலூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் தலைமையில் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்து அமைப்பினர் அந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருக்கும் மேடைக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். அப்போது, இந்து அமைப்பினருடன் பேசிய சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி, இக்கோவிலை இப்பகுதியில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். இதனை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். தற்போது விநாயகர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பினர் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...