கோவை: பொள்ளாச்சி, ஆழியாறு அருகே சாலையோர தடுப்பு கம்பி மீது இருசக்கர வாகனம் மோதியதில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (18), அஜித்குமார் (21). மற்றும் ஆழியார் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஆலன் (21) என இவர்கள் மூவரும் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் ஆழியார் அறிவு திருக்கோவில் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்று பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அன்பு நகர் அருகே உள்ள வளைவு பகுதியில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக்கம்பி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், படுகாயமடைந்த மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில், சிகிச்சை பலனின்றி கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தகுமார் மற்றும் ஆழியார் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஆலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், அஜீத் குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக, ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.