கோவை: தேசிய கொடியை அவமதித்ததாக பாஜக பிரமுகர் வெங்கடேஷ் என்பவர் மீது சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் அக்கட்சியின் கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் சின்னமான தாமரை சின்னம் இருந்த நிலையில், அதில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது தேசிய கொடி ஏற்றுவதற்கான சட்ட விதிகளுக்கு புறம்பானது.
இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க கணபதி மண்டல தலைவராக இருக்கும் வெங்கடேஷ் மீது தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், கடந்த 15ம் தேதி கோவை வி.கே.கே. மேனன் சாலையில் அனுமதியின்றி சாலையை மறைத்து பா.ஜ.கவினர் சுதந்திர தினவிழா கொண்டாடினர். இது தொடர்பாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் உட்பட 6 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் சட்டவிரோதமாகக் கூட்டம் சேர்த்தல், முறையற்ற தடுப்புகள் ஏற்படுத்துதல், தொற்று நோய் பரவும் விதத்தில் செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.