மாற்று திறனாளி என்ற காரணம் காட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சேர்க்க மறுத்ததாக கோவை மாணவர் புகார்

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பாண்டுரங்கன் வீதி பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர் சின்னதுரை. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்ற அவர் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 193 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.








கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பாண்டுரங்கன் வீதி பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர் சின்னதுரை. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்ற அவர் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 193 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பில் சேர, மாணவர் முயன்றுள்ளார். அப்போது, அவர் மாற்று திறனாளி என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, டவுன் ஹால் பகுதியில் இயங்கும் மாற்று திறனாளிகள் பள்ளியில் சேர்ந்து கொள்ளுமாறு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாக மாணவரின் சகோதரர் தெரிவித்தார்.



மேலும், அவர் கூறுகையில் தனது சகோதரர் மாற்று திறனாளி என்பதால் அவர்களுக்கு அருகில் உள்ள ராமநாதபுரம் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் பயில வாய்ப்பு அளிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து, கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை முதன்மை அலுவலருக்கு தகவல் அளிக்கபட்டு உள்ளதாகவும், மாணவரை பள்ளியில் சேர்த்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து தகவலறிந்த, மாவட்ட வருவாய் துறை அதிகாரி, ராமதுரை முருகன், அந்த மாற்று திறனாளி மாணவருக்கு அவர் கேட்கும் பள்ளியிலேயே படிக்க ஆவணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...