பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்க்கவும், திமுக சார்பில் சார் ஆட்சியரிடம் மனு.
கோவை: பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கூடுதல் பாடப்பிரிவுகளை ஏற்படுத்தவும், திமுக சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த ஆகஸ்ட் 13, 14 மற்றும் 17ம்தேதிகளில், பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், பிகாம் தொழில்முறை கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து, ஐந்து பாடப்பிரிவுகள் என ஆண்டுக்கு 600 மாணவர்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஏழை எளிய கல்லூரி மாணவர்கள், தனியார் கல்லூரி அல்லது உடுமலை மற்றும் கோவையிலுள்ள அரசு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தாங்கள் படிக்க விரும்பும் பாட பிரிவுகள் கல்லூரியில் இல்லாததால்,மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆகவே, நடப்பாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து, கூடுதல் பாடப்பிரிவுகளை கொண்டுவர வேண்டும், என்று, திமுக முரசொலி மன்ற தலைவர் மணிமாறன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி, உள்ளிட்ட திமுகவினர் சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம், மனு அளித்தனர்.