கோவை விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்; கட்சியை சேர்ந்த இருவர் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு

கோவை விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்; கட்சியை சேர்ந்த இருவர் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு








கோவை: கோவையில் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர், ராமகிருஷ்ணன் என்பவரது காரை அடித்து உடைத்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம், பாலாஜி நகர் பகுதியில் குடியிருப்பவர், இராமகிருஷ்ணன். இவர் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பில் கோவை மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.



இந்நிலையில், கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு,அமைப்பின் சார்பாக, அவர் நோட்டீஸ் அடித்து விநியோகம்

செய்ததாக கூறப்படுகிறது. அதில்,

சில நிர்வாகிகளின் பெயர் விடுபட்டுள்ளதாக கூறி, அதே அமைப்பில் உள்ள இடிகரையை பகுதியை சேர்ந்த, குணசேகரன் என்பவர் செல்போனில் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.



மேலும், குணசேகரனின் தூண்டுதலின் பேரில் மோகன், சரவணன், செல்வம், செந்தில் உள்ளிட்ட நான்கு பேர் இராமகிருஷ்ணன் வீட்டிற்கு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, மதியம் 2:30 மணி அளவில் வந்து, ஏன்

சில நிர்வாகிகளின் பெயரை நோட்டீசில் போடவில்லை? என அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை தரைகுறைவாக பேசியதாக,

ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது காரை இரும்பு கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்துச் சென்றுள்ளனர்,என்றும் அவர் பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



அவர் அளித்த புகாரின் பேரில், அவர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீீீீசார் விசாரனை மேற்கொண்டனர்.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டநபர்கள் மோகன், சரவணன், செல்வம், செந்தில் மற்றும் குணசேகரன் என்று அடையாளம் காணப்பட்டது. அதை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அவர்கள் ஐவரும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில், குணசேகரன் மற்றும் மோகன் ஆகிய இருவரும் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பை சேர்தவர்கள் என்றும் மற்றவர்கள் பற்றி விவரம் தெரியவில்லை, என்று சொல்லப்படுகிறது.



வழக்கில் சம்பந்தபட்ட நபர்கள், ராமகிருஷ்ணன் வீட்டில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின்

கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...