பொள்ளாச்சியில் இன்று 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் இன்று 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கடை வீதியில் உள்ள புத்தகக்கடையில் பணியாற்றும் 36 வயது பெண்ணுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால், பொள்ளாச்சி கடைவீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பகுதியில் 59 வயது முதியவருக்கும், குருமபாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 29 மற்றும் 25 வயது வடமாநில தொழிலாளர்கள் இருவருக்கும், வடக்கிபாளையத்தில் முதியவர் ஒருவருக்கும், கோட்டூரில் ஒருவருக்கும் என, இன்று பொள்ளாச்சியில் மொத்தம் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நோய் பாதிப்புக்குள்ளான அனைவரது குடியிருப்பு மற்றும் பணியாற்றும் இடங்களில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.