கோவை: கோவை கணுவாய் பகுதியில் 13 தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை கணுவாய் பகுதியில் 13 தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை துடியலூர் அடுத்த கணுவாய் பகுதியில் உள்ள குப்பநாயக்கன்பாளையம், இந்திரா காலனியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை எழுந்து பார்க்கும்போது, தெரு நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடப்பதும், ஒரு சில நாய்கள் உயிருக்கு போராடி வருவதும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, அவர்கள் பன்னிமடை ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் விலங்குகள் நல வாரியத்திற்கு நாய்கள் இறந்துகிடப்பது குறித்து தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி அதிகாரிகள் மற்றும் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், இறந்த கிடந்த நாய்களை ஆய்வு செய்தனர்.
அதில், விஷம் வைக்கப்பட்ட கோழி கழிவுகளை தின்றதால் இந்த நாய்கள் இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து, இறந்த கிடந்த நாய்களை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

மேற்கொண்டு, அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தேசிய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தடாகம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து, வழக்குபதிவு செய்த தடாகம் போலீசார் கோழி கழிவுகளில் விஷம் வைத்து கொன்றவர்கள் யார்..? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியில் 13 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.