பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்கு முக்கிய சாலையாக உள்ளது, வடக்கிபாளையம், நடுபுணி சாலை.



கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்கு முக்கிய சாலையாக உள்ளது, வடக்கிபாளையம், நடுபுணி சாலை.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காய்கறி, கோழி முட்டை, மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல இந்த சாலை முக்கிய பங்களிக்கிறது. கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகமுள்ள, இந்த ரோட்டில் வடக்கிபாளையம் பிரிவு அருகே சுமார் 300 மீட்டர் நீளம் மற்றும் 100 அடி அகலம் கொண்ட ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இப்படியிருக்க, மேம்பாலம் கட்டி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கு மின் விளக்குகள் அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.



மேலும், இந்த பாலம் மிகவும் வளைவாக உள்ளதால், இங்கு ரிப்லெக்டர் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டததால், இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது.

எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வடக்கிபாளையம் பிரிவு மேம்பாலத்தில் மின் விளக்கு மற்றும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் செய்ய தாமதமின்றி செய்து முடித்து, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...