கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் 74-வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈஷாவின் பிரதான நுழைவாயிலான மலைவாசலில் நடைபெற்ற இந்த விழாவில் கொரோனா தடுப்பு களப்பணியில் முதல் நிலையில் சேவையாற்றும் மருத்துவர்களை கெளரவிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா மற்றும் செம்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் அபிநயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். டாக்டர் நிர்மலா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களின் சுதந்தர தின வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. மேலும், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம், வார்டு உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், தூய்மைப் பணியாளர்கள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.