திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை; 3.67 கோடி நலத்திட்டங்களை வழங்கினார்

திருப்பூர்: இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றிவைத்து ரூபாய் 3 கோடியே 67 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


திருப்பூர்: இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றிவைத்து ரூபாய் 3 கோடியே 67 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கொரோனா ஊரடங்கு காரணத்தால், நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தின விழா மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனையொட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



பின்னர், திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 70 காவலர்களுக்கு, பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் என 279 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

மேலும், பல்வேறு அரசு துறைகளுக்கு 3 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பளர், மாநகர காவல் ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...