இ-பாஸ் இல்லாமல் கடலூரில் இருந்து 5 மாவட்டங்களை கடந்து நீலகிரிக்கு வர முயன்ற மூவர் சோதனை சாவடியில் சிக்கினர்!

நீலகிரி: இ-பாஸ் இல்லாமல் கடலூர் கள்ளக்குறிச்சியில் இருந்து 5 மாவட்டங்களை கடந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வர முயன்ற மூவர் சோதனை சாவடியில் சிக்கினர்.

நீலகிரி: இ-பாஸ் இல்லாமல் கடலூர் கள்ளக்குறிச்சியில் இருந்து 5 மாவட்டங்களை கடந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வர முயன்ற போது சோதனை சாவடியில் சிக்கிய மூவர் தனிமைபடுத்தப்பட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு பர்லியார் மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் இரண்டு சோதனை சாவடிகள் உள்ளது.

இந்த வழியாக உதகைக்கு வருபவர்களிடம் இ-பாஸ், தீவிர பரிசோதனைக்குப் பின் அவர்களின் மாதிரிகள் எடுத்த பின்பு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுதான் மாவட்டத்திற்குள் அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு இருசக்கர வாகனத்தில் 3 பேர்கள் நீலகிரி குஞ்சப்பனை சோதனை சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.



அப்போது, அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர்களின் பெயர்கள் மகேந்திரன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் என தெரியவந்தது. இவர்கள் கடலூர் கள்ளக்குறிச்சியில் இருந்து இ-பாஸ் இல்லாமல் பல சோதனை சாவடிகளைக் கடந்து பல்வேறு குருக்கு வழியாக கிராமத்திற்குள் புகுந்து இ-பாஸ் இல்லாமல் வந்ததாக தெரிந்தது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மாற்று பாதை இல்லாத காரணத்தால் குஞ்சப்பனை சோதனை சாவடியில் சிக்கிக்கொண்டனர். இவர்கள் JCP இயந்திரத்தை இயக்குபவர்கள் என்றும் கோத்தகிரியில் நண்பனை பார்க்க வந்ததாகவும் கூறியதை தொடர்ந்து கோத்தகிரி போலீசார் அவர்களை தனிமைபடுத்தவும் கொரானா தொற்று பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...