கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக, கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
திருப்பூரை சேர்ந்த முஹம்மது சாஹில் என்பவர் போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்கள் தயாரித்து, விற்பனை செய்ததாக போலி கணக்கு காட்டி, அதற்கு அரசு அளிக்கும் வரி சலுகை (input credit) பெற்றுள்ளார். இதற்கு, மூளையாக இருந்த திருப்பூரை சேர்ந்த ஜி.எஸ்.டி., கன்சல்டண்ட்டாக உள்ள கந்தசாமி என்பவர் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையில், முஹம்மது சாஹில் தொழில் நஷ்டம் காரணமாக, கந்தசாமியை அணுகிய போது, மோசடியில் ஈடுபட உதவியதும், அதே போல், பல்வேறு நிறுவனங்களுக்கு இந்த மாதிரியான போலி பெயரில் இன்வாய்ஸ், இ-பில் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து, அதற்கு வருமான வரி இலக்கு பெறவும் திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற பட்டய கணக்காளர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்ததும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து, போலி ஆவணங்கள், இன்வாய்ஸ், பல்வேறு நிறுவன லெட்டர்ஹெட்ஸ், மொபைல் சிம் கார்டு ஆகியவையை பறிமுதல் செய்த ஜி.எஸ்.டி., அதிகாரிகள், முஹம்மது சாஹில், கந்தசாமி ஆகிய இருவரையும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சலுகை தொகையான ரூ.10 கோடி ஜி.எஸ்.டி., கிரெடிட் உட்பட ரூ.50 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.