கோவை: கோவையில் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 32.31 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக கருதப்படும் சிறுவாணி நீர், மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளவு கொண்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுவாணி அணை பகுதியில் நேற்று முன் தினம் 150 மிமீ மழை பெய்துள்ளது, நேற்று 3 மிமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளதால், அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று, சிறுவாணியில் இருந்து 96.13 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.