கோவை: பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 100 அடியை எட்டியுள்ளது.
கோவை: பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 100 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பாவனி சாகர் அணை உள்ளது. அணையின் கொள்ளளவு 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி, அவலாஞ்சி, குந்தா, கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகள் உள்ளன.
அதேபோல, பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பவானி சாகர் அணைக்கு வரும். இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் நிலங்கள் பாசன வசதிகள் பெறும்.
இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 29.9 டிஎம்சியாக இருக்கிறது. நேற்றைய முன் தினம் வினாடிக்கு 6,667 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது.
மேலும், நீர் பிடிப்பு பகுதிகளில் குறைந்து வரும் மலைப்பொழிவால் அணைக்கு நிர்வரத்து விநாடிக்கு 6,498 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.