அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை: விநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.








கோவை: விநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



கோவை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்ததை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் இந்த தடையினால் விநாயகர் சிலை மற்றும் பொம்மை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றார்.

அதேபோல, 99 சதவீத மக்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ள நிலையில், விநாயகர் வழிபாடு மூலம் மக்களுக்கு தைரியம் வரும் எனவும் அரசியல் காரணத்திற்காகவும் சிறுபான்மையினர் ஓட்டுக்காக தடை விதித்துள்ளனர் என்று கூறிய அவர், நக்சலைட் சிந்தனையுள்ள அதிகாரிகள் முதலமைச்சருக்கு தவறான ஆலோசனை வழங்கி தடை விதித்துள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அரசின் தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் எனவும் கோவை மாவட்டத்தில் மூவாயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக்கிற்கு ஏன் தடை விதிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், டாஸ்மாக்கிற்கு பாதுகாப்பு கொடுப்பது போல விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பாதுகாப்பு வழங்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...