கோவை: கோவை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்வோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றி, திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வழிபாட்டு தளங்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் திருமணம் செய்வோர் முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘‘திருமண நிகழ்ச்சிகளை வழிபாட்டு தளங்களில் அல்லது பிற இடங்களில் நடத்த விரும்புவோர், அவர்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடமோ, இல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அணுகி முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே, அறிவித்தபடி திருமண நிகழ்ச்சிகளில் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற கூடாது. அப்படி, கலந்துகொள்ளும் அனைவரும் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’’, என்றார்.