கோவை: கடந்த நான்கு மாத காலமாக, கொரோனா ஊரடங்கால், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்துள்ளதால், மேலும் வேதனை அடைந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கும், மண் பானை, சட்டி, உள்ளிட்ட பலவகையான மண்பாண்டங்களை, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவிழா காலங்களில் தான் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலையில், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம்போல் விமர்சியாக நடப்பது கேள்விக் குறியாகியுள்ளது.

இதனால், பெரிய மண் சிலைகள் செய்வதை தவிர்த்து, வீட்டில் வைத்து கும்பிடும் சிறிய சிலைகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், பொள்ளாச்சி மண்பாண்ட தொழிலாளர்கள்.
இந்த வருடம், விநாயகர் சிலை ஆர்டர்கள் பெரிய அளவில் ஏதும் வரவில்லை எனவும், அதனால் பெரிய சிலைகளை செய்வதை தவிர்த்து, வீடுகளில் வழிபாடு செய்யும் சிறு சிலைகளை செய்து வருவதாக, தெரிவித்தனர்.

மேலும், மக்கள் வீடுதோறும் சிறிய சிலைகளை வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் களிமண் சிலைகளை தயாரித்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தனர்.
சிலைகளின் வடிவம் மற்றும் அளவிற்கேற்ப 100 ரூபாய் முதல், 2000 ரூபாய் வரை சிலைகள் விற்பனைக்கு பொள்ளாச்சியில் தயாராகி வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக விசேஷங்கள், கோயில் திருவிழாக்கள், நடைபெறவில்லை என்பதால் தீச்சட்டி, முளைப்பாரி புரவிகள், குழந்தை பொம்மை, உள்ளிட்ட மண் பொம்மைகள் வியாபாரம் நடக்கவில்லை என்று வேதனை தெரிவித்த அவர்கள், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் ஓரளவு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, கூறுகின்றனர், மண்பாண்ட தொழிலாளர்கள்.