கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேரளா மாநில எல்லையில் பொள்ளாச்சி உள்ளதால் இங்கு, அதிகளவில் நேந்திரன் ரக வாழைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கதளி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும், பல விவசாயிகள் தென்னைக்கு ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
கன மழை மற்றும் அதிக காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் வாழை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவது வழக்கம். எனவே, வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை காப்பீடு செய்ய வைக்கும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது, பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஆத்து பொள்ளாச்சி, புரவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி துவங்கியுள்ளது. இவ்வாறு, வாழை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட பிரீமியம் கட்டணம் செலுத்தி, வரும் 31ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பயிர்க் கடன் பெற்றவர்கள் வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும், ஆன்லைன் வாயிலாகவும் பிரீமியம் தொகையை செலுத்த தோட்டக்கலை துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.