ஊராட்சித்துறை அதிகாரிகள் தி.மு.க கவுன்சிலர்களை மதிப்பதில்லை, உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை, எனக்கூறி தி.மு.க மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில், தி.மு.க மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில், தி.மு.க மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.



கோவை மாவட்டத்தில் 17 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 5 கவுன்சிலர்கள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் ஆவர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட கவுன்சிலர்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர், சாந்திமதி தலைமையில் நடைபெற்றது. 

இதில், தி.மு.கவை சேர்ந்த கவுன்சிலர்கள் கார்த்திக், ரம்யாகுமாரி கருணாகரன், வளர்மதி கார்த்திகேயன் மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த ராதாமணி கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 



இதனிடையே, ஊராட்சித்துறை அதிகாரிகள் மதிப்பதில்லை, உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை எனக்கூறி தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், தி.மு.க கவுன்சிலர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் தி.மு.க கவுன்சிலர்களை மதிப்பதில்லை கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்வதில்லை. ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கு கீழே சுமார் 8 முதல் 9 பஞ்சாயத்துகள் மற்றும் 55 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற வசதிகளை செய்து தரக்கூட போதுமான நிதி ஒதுக்கப்படுதில்லை.

இதுகுறித்து, மூன்று முறை நடந்த கூட்டத்தில் எடுத்துக்கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை, கண்டித்து தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இந்நிலை, தொடர்ந்தால் அடுத்த கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...