கோவை: சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (40), இவர் டேங்கர் லாரி ஒட்டுனராக உள்ளார். நேற்றிரவு, அவர் டேங்கர் லாரியில் சேலம் - கொச்சின் புறவழிச்சாலை வழியாக கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தார்.

இன்று அதிகாலையில், கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே வந்த போது டேங்கர் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர் புறத்தில் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஈச்சர் வேன் மீது டேங்கர் லாரி மோதியது.
இந்த விபத்தில், ஈச்சர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில், ஈச்சர் வேனை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த வீரமணி மற்றும் அடையாளம் தெரியாத கீளினர் என இருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லேசான காயமடைந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சேகர், சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.