பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தனியார் மருத்துவமனை செவிலியர் உட்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, அவ்வப்போது நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, அவ்வப்போது நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 2 பேருக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவருக்கும் நோய் தொற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நோய் பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறையினர் கொரோனா தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி, குடியிருப்புகளை சுற்றிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...