நீலகிரி: கொரோனா ஊரடங்கால் மன உளைச்சலுக்கு ஆளாகி இத்தாலியில் தற்கொலை செய்து கொண்ட நீலகிரியைச் சேர்ந்த மாணவனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நீலகிரி: கொரோனா ஊரடங்கால் மன உளைச்சலுக்கு ஆளாகி இத்தாலியில் தற்கொலை செய்து கொண்ட நீலகிரியை சேர்ந்த மாணவனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தூனேரி பகுதியை சேர்ந்த விவசாயி சதானந்தா. இவரது மனைவி புஸ்பா. இவர்களுக்கு சுஜித் பிரதீக்ஸ் என்ற மகன் உள்ளனர். சுஜித் இத்தாலி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் பிரதீக்ஸ் (20) இத்தாலி நாட்டில் நேப்பில்ஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
இத்தாலியில் கொரோனா தொற்று அதிகரித்ததால் நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தில் இவர் மட்டும் இந்தியராக இருந்ததால் தனியாக ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில், தனது அண்ணன் சுஜித் இருக்கும் பெர்மோ என்ற இடத்திற்கு சென்று அவருடன் தங்கியுள்ளார்.
இருப்பினும் மன உளைச்சல் அதிகரித்ததை தொடர்ந்து பிரதீக்ஸ் மனநோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். நல்ல நிலையில் இருந்த பிரதீக்ஸ் கடந்த திங்களன்று 3வது மாடி தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் வேண்டுகோளை ஏற்று தமிழக பாஜக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை தொடர்பு கொண்டு மாணவன் பிரதீக்ஸின் உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவு துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.