சர்வதேச யானைகள் தினம் - வனத்தின் செல்லப் பிள்ளைகளை பாதுகாத்து இயற்கையுடன் ஒன்றிணைவோம்!

கோவை: யானை எங்கே தென்பட்டாலும் நம் கவனத்தைக் கண்டிப்பாகக் கவர்கிறது. ஒரு அதிசய உணர்வுடனேயே எத்தனை முறை பார்த்தாலும் எந்த வயதில் பார்த்தாலும் நாம் யானையைப் பார்க்கிறோம்.

கோவை: யானை எங்கே தென்பட்டாலும் நம் கவனத்தைக் கண்டிப்பாகக் கவர்கிறது. ஒரு அதிசய உணர்வுடனேயே எத்தனை முறை பார்த்தாலும் எந்த வயதில் பார்த்தாலும் நாம் யானையைப் பார்க்கிறோம்.

அந்த வகையில் சர்வதேச யானைகள் தினமான இன்று யானைகள் சந்திக்கும் அவலநிலை, உலக மக்களுக்கும், காடுகளின் வளர்ச்சிக்கும் யானைகளின் பயன்பாடு என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு….

நான் மிகப்பெரியவன், உடல் அளவில் மட்டும் தான்.. உள்ளத்தில் எப்போதுமே சிறியவன். கோவிலுக்கு செல்லும் பாதையில், நின்றால் என்னை கல்லால் அடித்தும், வெடிவைத்தும் துரத்துகிறீர்கள். பின்பு கோயிலுக்குச் சென்று முதலில் விநாயகரை வழிபடுவது வேடிக்கையாக இருக்கிறது. இரண்டு JCB இயந்திரம் மற்றும் ஒரு லாரி இருந்தால் என்னை சுலபமாக பிடித்து, கராலில் அடைத்து விடுகிறீர்கள். ஆனால் வாழ்நாள் முழுவதும் உருவாக்கும் காட்டை, ஆயிரம் JCB எந்திரங்கள் மற்றும் லாரிகளால் நிச்சயம் உருவாக்க முடியாது.

மேலும், நான் ஒரு நாளைக்கு 200 கிலோ முதல் 250 கிலோ வரையிலான உணவுகளை சாப்பிடுகிறேன். அதில் 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். என்னுடைய சாணத்தில் இருந்து ஒரு நாளைக்கு 300 முதல் 500 செடிகளை உருவாக்குகிறேன். ஒரு மாதத்திற்கு 3000 தாவரங்கள் என்னால் உயிர்பிக்கப்படுகிறது. வருடத்திற்கு 36,500 மரங்கள் வளர்கின்றன. இதில் இருந்தாவது நீ புரிந்து கொள் மனிதனே நான் காட்டை உருவாக்குபவனே தவிர அழிப்பவன் அல்ல.

அதேபோல, சாப்பிட்டவுடன் 25 முதல் 35 கிலோ மீட்டர் வரை நடப்பேன். அதன் மூலம் என் வழித்தடத்தை நானே உருவாக்கி கொள்வேன். ஒரு இடத்தில் நிலையாக இருப்பதற்கு நான் மனிதன் அல்லவே. ஒரே இடத்தில் இருந்தால் உணவுத்தட்டுப்பாடு மற்றும் உணவுச்சங்கிலி பாதிப்பு ஏற்படும் என்பதால், தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறேன்.

என் வழித்தடத்தை பல உயிர்கள் பயன்படுத்துகிறது. போகும் வழியில் எத்தனை இடர்பாடுகள் கட்டியுள்ளீர்கள். ஆசிரமங்கள், கல்வி கூடங்கள், சொகுசு விடுதிகள், காண்கீரிட் வீடுகள் என அடுக்கி கொண்டே போகலாம். என் வாழ்விடத்தை உங்கள் வாழ்விடமாக்கி கொண்டீர்கள். என் வீட்டில் உங்களுக்கு இடம் அளித்தேன். அதற்காக நீங்கள் கொடுத்தது என்ன? பட்டாசு வீசுவதும், கல் மற்றும் கட்டையால் அடிப்பது என்று எனக்கு வேதனைகளை தந்தீர்கள்.

நான் உங்களை துன்புறுத்துவதாக சொல்லுகிறீர்கள்? அது உண்மையல்ல.. உணவுக்காக உங்களை தேடி வந்தது உண்மை தான். அதற்காக அன்னாசிப்பழத்தில் பன்றிக்காய் வைத்து என்னையும் கருவில் உண்டான குழந்தையையும் கொலை செய்தீர்களே என்ன நியாயம் மனிதர்களே? உங்களின் பேராசையினால் தந்தத்திற்கு ஆசைப்பட்டு சுடவும் செய்தீர்கள். இப்பொழுது விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி போடுவதும், கரண்ட் வைப்பதும் வேடிக்கையாகிவிட்டது. ஓ...! இதுதான் மனிதாபிமானமோ? உங்களைப் போல தான் எங்களுக்கும் குடும்பங்கள், குழந்தைகள் உள்ளன. அதை எல்லாம் மறந்துவிட்டு எங்களின் பலபேரை கும்கியாக மாற்றிவிட்டீர்கள்.

அவர்களை வைத்து எங்களை பிடிக்கவும் செய்கிறீர்கள். எங்களை காப்பாற்றவதற்காக சமூக அமைப்புகள் போராடியும் வருகிறார்கள். இன்று எங்கள் தினம். நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் #save elephants #save forest என்று ஹேஷ்டேக் எல்லாம் போட்டு வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் தாயின் வயிற்றில் பிறந்த எனக்கு எத்தனை துன்பங்கள்.

கடைசியாக வருங்கால குழந்தைகளுக்கு ஆபத்தான விலங்கு என்று மறந்தும் கற்பித்து விடாதீர்கள் மனிதர்களே..! உங்களிடம் கேட்பது ஒன்று தான் எங்கள் நிலம் எங்கள் உரிமை என்றும் மறவாதீர்கள்..!

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...