கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று!

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு செயல்பட்டு வந்த அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றபிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

மேலும், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததனால் சிறப்பு உதவி ஆய்வாளர் சோதனை மேற்கொண்டு உள்ளார். இதில் அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோல, கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பயிற்சியாளர் விடுதி காவலர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, மீதம் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த வளாகத்தை மூடவும் அறிவுறத்தபட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...