கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய மேலும் நான்கு ரோபோக்கள் வாங்க திட்டம்..!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஆறு ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மேலும் நான்கு ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.








கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஆறு ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மேலும் நான்கு ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 4,000 திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.



இதனிடையே, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கடந்த ஜூலை 17ம் தேதி ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக ஐந்து நவீன ரோபோக்கள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

தற்போது, இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றன என்பதால் மேலும் 4 நான்கு ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை அடைப்புகளை எதிர்பார்த்த அளவு ரோபோக்கள் நன்கு சுத்தம் செய்து வருகின்றன. எனவே, மேலும் 4 ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது,’’ என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...