கோவை: பாஜக எம்.பியை கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அனைத்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கண்டித்து பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் தொடர் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

தனியார் மயப்படுத்தும் முயற்சியை நியாயப்படுத்த பாஜகவின் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கர்நாடக மாநில பாஜக எம்பி ஆனந்தகுமார் தனது வீட்டு பிஎஸ்என்எல் தொலைபேசி இயங்கவில்லை என்றும், அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தேச விரோதிகள், இவர்கள் அனைவரையும் விரட்டிவிட்டு பிஎஸ்என்எல்-லை தனியார் மயப்படுத்த வேண்டும் என நேற்று பேசியுள்ளார். இது பிஎஸ்என்எல் ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அனைத்து கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்று மத்திய அமைச்சரின் பேச்சை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.