கோவை: பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. கடந்த 5ம் தேதி பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த கோட்டூர் ரோடு, சூளேஸ்வரன்பட்டியில் இருந்த ராட்சத மரக்கிளை ஒன்று சூறாவளிக் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அப்போது, அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நல்லூரை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் மீது மரக்கிளை விழுந்துள்ளது.
அதில் நிலைகுலைத்த அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.