வால்பாறையில் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

கோவை: வால்பாறையில் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில், வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோவை: வால்பாறையில் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில், வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் காடர், முதுவர், புலையர் இன பழங்குடி இனமக்கள் 18 செட்டில் மென்ட்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி அவர்கள் வசிக்கும் பகுதியில் பட்டா வழங்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கள்ளர் செட்டில்மெண்ட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர்கள் மாற்று இடத்தில் குடி அமைத்தனர். வனத்துறையில் அவர்களை அப்புறப்படுத்தி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் குடியமர்த்தினர்.



இந்த நிலையில், பழங்குடியின மக்கள் தங்களுக்கு வனப் பகுதியிலேயே இடம் ஒதுக்கவும் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் வனத் துறைக்கு மனு அளித்த நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விரைவில் வனத்துறையின் தலைமையை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தக்க முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறையினர் 30க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...