அங்கொட லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கோவை: இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்த விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.








கோவை: இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்த விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்த வழக்கில் அவனது காதலி அமானி தாஞ்சி கோவையில் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போல், அங்கொட லொக்காவிற்கு போலியான ஆவணங்கள் தயாரிக்க உதவிய மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூர் பகுதியை செந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டஅம்மானி தாஞ்சி, சிவகாமி சுந்தரி, தியானேஸவரன் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

சிபிசிஐடி போலீசார் ஐந்து நாட்கள் அனுமதி கேட்டிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகுமார் அனுமதி அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது அமானி தாஞ்சி, தியானேஸ்வரன் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மற்றொருவரான சிவகாமி சுந்தரி, சிபிசிஐடி காவலுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தார். இவர்கள் மூவரையும் வரும் 15ம் தேதி 2 மணிக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...