கோவை: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் இதுவரை கோவை மாவட்டம் வருவதற்கு இ-பாஸ் கேட்டு ஆன்லைன் மூலம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன, என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவரது விண்ணப்பம் சரியான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதும், மறுபடியும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஒரு சிலர் 10 விண்ணப்பங்கள் வரை மீண்டும், மீண்டும் விண்ணப்பிக்கின்றனர். இதனால் இ-பாஸ் விண்ணப்பங்களின் எண்ணிகை அதிகமாக உள்ளது.
உரிய காரணங்களுடன், சரியான ஆவணங்கள் இணைக்கப்பட்டு உள்ள அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்படுகின்றன.
மருத்துவ அவசர தேவைக்கு கடந்த மார்ச் முதல் தற்போது வரை இ-பாஸ் கேட்டு 1,74,250 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 1,28,384 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. 44,622 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 33,745 விண்ணப்பங்கள் வந்ததில் 9,891 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, 23,205 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15,516 விண்ணப்பங்கள் வந்ததில், 4,411 விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. 10,979 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன.
வெளி மாவட்டங்களில் சிக்கிக்கொண்டு சொந்த மாவட்டமான கோவை திரும்ப 2,04,932 விண்ணப்பங்கள் வந்ததில், 45,612 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 1,57,718 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன, என தெரிவித்தனர்.