கோவை: கோவை சீரநாயக்கன் பாளையம் அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர்ராஜன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை கடத்தி சென்ற சுந்தரராஜனை தேடி வந்தனர். இதனிடையே, தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் சென்ற போலீசார், திண்டுக்கல்லில் தனது தந்தையுடன் தங்கி இருந்த சுந்தர்ராஜனை கைது செய்து ஐந்து மாதங்களாக காணாமல் போன சிறுமியை மீட்டனர்.
இதனை தொடர்ந்து, சுந்தரராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.