கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஆசிரமம் வீதியில் வசித்த பூ வியாபாரி ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.

நேற்று முன்தினம் அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது வழியிலேயே மூச்சு திணரல் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து, ஜமீன் ஊத்துக்குளியில் அவர் வசித்த வீடு மற்றும் அருகே உள்ள வீதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தேர்நிலையத்திலிருந்து கடைவீதிக்கு செல்லும் வழியில் உள்ள பூ மார்க்கெட்டில் வேலை பார்த்த பூ வியாபாரி, இறந்தது அப்பகுதி வியாபரிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. எனவே, பூ மார்க்கெட்டை தற்காலிகமாக மூட சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அப்பகுதி முழுவதும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. பூ மார்க்கெட் மற்றும் மார்க்கெட் அருகே உள்ள சில கடைகளும் அடைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.