வெள்ளலூர் நொய்யல் ஆற்றின் மீது உள்ள என்.ஜி.ஆர் பாலத்தை அகலமான மேல்மட்ட பாலமாக சீரமைக்க வேண்டும் - நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தல்

கோவை: கோவை வெள்ளலூர் நொய்யல் ஆற்றின் மீது உள்ள என்.ஜி.ஆர் பாலத்தை அகலமான மேல்மட்ட பாலமாக சீரமைத்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கோவை வெள்ளலூர் நொய்யல் ஆற்றின் மீது உள்ள என்.ஜி.ஆர் பாலத்தை, நொய்யல் ஆற்றில் செல்லும் நீரை தடுக்காத வகையில் தூண்கள் அமைத்து அகலமான மேல்மட்ட பாலமாக சீரமைத்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ, மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள வேண்டுகோள் மனுவில் தெரிவித்திருப்பதாவது :-

கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில், நொய்யல் ஆற்றின் மீது உள்ள என்.ஜி.ஆர் பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கருங்கல்லால் கட்டப்பட்டு உள்ளது. இந்த பழமையான பாலத்தின் பல இடங்களிலும், சுவர்களிலும், தாங்கு தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இந்த பாலம் இடிந்து விழும் சூழல் உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரும்போது, இந்த பாலம் முழுவதுமாக மூழ்கி விடும். இதனால் இந்த பகுதியில் இருக்கும் மக்கள் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் தற்போது பெய்த கனமழையில் இந்த பாலம் மேலும் சேதமாகி விட்டது.

இந்த பாலத்தின் உயரத்தையும், அகலத்தையும் அதிகரித்து, சாலையை சீரமைத்து, பொதுமக்கள் அச்சமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 04.09.2018 , 21.01.2019 , 21.02.2019 மற்றும் 13.08.2019 அன்று கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து வலியுறுத்தி உள்ளேன்.

மேலும், இந்த பாலம் சீரமைப்பது சம்பந்தமாக, கடந்த 24.01.2019 மற்றும் 25.06.2019 அன்று, கோவை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தி உள்ளேன். ஆனால், இதுநாள் வரையிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஆகவே, வெள்ளலூர் வழியாக பொள்ளாச்சி செல்லும் வழித்தடம் மற்றும் கேரளாவையும் இணைக்கும் வழித்தடமாகவும் இந்த பாலம் உள்ளதால், தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயணிக்கும் இந்த பாலத்தை, எதிர்வரும் காலங்களில், மேலும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தரைப்பாலமாக இல்லாமலும், நொய்யல் ஆற்றில் செல்லும் நீரை தடுக்காத வகையில் தூண்கள் அமைத்து அகலமான மேல்மட்ட பாலம் அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...