கோவை: தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளா அட்டப்பாடியில் அனைத்து விவசாயிகளையும் வாரத்தில் ஏழு நாட்களும் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஆனைகட்டி மற்றும் தடாகம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் மாநில, மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இரவு, பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநில எல்லையில் ஆனைகட்டியில் காவல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து சிறப்பாக கண்காணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, கோவை ஆனைகட்டி கிராமம், தடாகம் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதியில் குடியிருந்து கொண்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளா அட்டப்பாடியில் சோலையூர் கிராமம், கோட்டத்துரை கிராமம், அகழி ஆகிய இடங்களில் சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து விவசாயிகளையும் வாரத்தில் ஏழு நாட்களும் விவசாயம் செய்து வர அனுமதி வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கு விவசாய அடையாள் அட்டை வழங்க வேண்டும், விவசாயிகள் விளை நிலங்களில் பயிரிடக்கூடிய விளை பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து செல்ல எல்லா நாட்களிலும் அனுமதிக்க வேண்டும், விவசாயம் சம்பந்தப்பட்ட கருவிகள், உரங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் எடுத்து செல்லவும், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று வரவும் எல்லா நாட்களிலும் அனுமதிக்க வேண்டும் என்று ஆனைகட்டி மற்றும் தடாகம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று நோய் பாதுகாப்பு வழிமுறைகளையும், அறிவுரைகள் அனைத்தும் பின்பற்றி நடந்து கொள்வதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.