கோவை அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - விரைந்து வந்து தீயை அணைத்த தெற்கு தீயணைப்பு துறையினர்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனிடையே, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே மின் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த தெற்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சசிகுமார் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையில் பரவியிருந்த தீயை அணைத்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...