பொள்ளாச்சியில் தொடர்மழை காரணமாக கொப்பரை தேங்காய் உற்பத்தி பாதிக்காப்பட்டு, பல கோடி ரூபாய் வர்த்தகம் முடக்கம்
கோவை: பொள்ளாச்சியில் தொடர்மழை காரணமாக கொப்பரை தேங்காய் உற்பத்தி பாதிக்காப்பட்டு, பல கோடி ரூபாய் வர்த்தகம் முடக்கம். உற்பத்தி குறைவால் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், தென்னை சார்ந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காட்டம்பட்டி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கொப்பரை தேங்காய்களை காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பொள்ளாச்சி மற்றும் நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால், கொப்பரை உலர வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொப்பரை உற்பத்தி முடங்கி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் பல ஆண்டுகள் போராடி தற்போது, ஒரு கிலோ 93 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விவசாயிகளுக்கு விலை கிடைகிறது. ஒரு களத்தில் ஒரு வாரத்திற்க்கு சுமார் 1 டன்கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், ஒரு வாரத்தில் 1 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது. தற்போது தொடர் மழையால் பொள்ளாச்சி, நெகமம் சுற்றுவட்டாரத்தில்100க்கும் மேற்பட்ட களங்களில் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டு, பலகோடி ரூபாய் வர்த்தகம் முடங்கி, நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே, அரசு கொப்பரை கொள்முதல் நிலையங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி, கொப்பரை கொள்முதல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கொப்பரை உற்பத்தி குறைந்துள்ளதால், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.