புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் வரைவுச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவை: புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் வரைவுச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தபெதிக, திவிக, தி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். அப்போது புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் வரைவுச் சட்டம் 2020 ஆகியவற்றை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
புதிய கல்விக் கொள்கை குலக் கல்வி திட்டத்தை அமல்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்தியை திணிக்க முயல்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், சுற்றுச்சூழல் வரைவுச் சட்டத்தினால் தனியார் பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க உதவும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இவ்விரு சட்டங்களும், ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரான வகையில் இருப்பதாக கூறிய அவர்கள், இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.