குடிப்பழக்கத்தற்கு அடிமையாகி தந்தையை சொத்துக்காக தெருவில் வைத்து உதைத்த மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை..!

குடிப்பழக்கத்தற்கு அடிமையாகி தந்தையை சொத்துக்காக தெருவில் வைத்து உதைத்த மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை.

கோவை: குடிப்பழக்கத்தற்கு அடிமையாகி தந்தையை சொத்துக்காக தெருவில் வைத்து உதைத்த அவமதித்த மகனை, தந்தையேகோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதி அருகம்பாளையத்தில் வசித்து வருபவர் வேலுச்சாமி (65).

இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இளைய மகன் சம்பத்குமார் தந்தையின் வீட்டருகேயும், மகள் தங்கமணி கடத்தூரிலும், வசித்து வருகின்றனர்

இவரது மூத்த மகன் பழனிசாமி (39) கோவில்பாளையம் அருகே உள்ளவரதையங்கார்பாளையத்தில் வசித்து வருகிறார். ஆக்டிங் டிரைவராக பணியாற்றும்

இவரது மனைவி பிரியா, அதே பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு பணியாளராக உள்ளார்.

இத்தம்பதியினருக்குநிஷாந்த்(9) என்ற மகனும் தர்ஷினி(8) மகளும் உள்ளனர்.

பழனிச்சாமிக்கு குடிபழக்கம் இருந்ததாகவும் அவ்வப்போது இவருக்கும் இவரது தந்தைக்கும் இடையேசொத்து பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் இருக்கும் போது

பழனிச்சாமி சொத்து கேட்டு தனது தந்தையை தெருவில் வைத்து அடிப்பதை வழக்காக கொண்டு இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று மது அருந்தி இருந்த நிலையில் பழனிச்சாமி தன் தந்தை வேலுச்சாமியை காலால் எட்டி உதைத்து தகாத வார்த்தைகள் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த தன் மகனை கோடாரி கொண்டு தலையின் பின்புறமும், வலது காலில் வெட்டி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி பலியானார்.

இது குறித்து, வழக்கு பதிவு செய்துள்ள அன்னூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...