கோவை: கோவை லட்சுமி மில் அருகே உள்ள தனியார் சிறுநீரக சம்மந்தப்பட்ட மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த முதியவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததற்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: கோவை லட்சுமி மில் அருகே உள்ள தனியார் சிறுநீரக சம்மந்தப்பட்ட மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த முதியவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததற்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார் (52). இவருக்கு திருமணமாகி ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கு சிறுநீரக தொந்தரவினால் கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள கிட்னி செண்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் இவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததையடுத்தும், ரூபாய் 80,000 மதிப்புள்ள ஊசிகள் ஐந்து முறைக்கு மேல் செல்லுத்தபட்டது என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, அவருக்கு 15 முறைக்கு மேல் இவருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்துள்ளதாகவும், தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அவருக்கு கல்லீரலில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவர்கள் பரிசோதனை செய்ததையடுத்து, அவருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக, அய்யனாரின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல, சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பதால் மருத்துவமனை நிர்வாகத்தினரே அய்யனாரை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்ததாகவும், அதற்கான தொகையை மருத்துவமனையில் அவர்களே கட்டியதாகவும், குற்றம் சாட்டினர்.
மேலும், அய்யனாருக்கு கடந்த மாதம் 27 ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகட்டிவ் என முடிவு வந்தது எனவும் தொடர்ந்து இந்த மாதம் மூன்றாம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி என முடிவு வந்ததாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனவும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் இறந்ததாகவும், அவர் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கும், அவரின் உயிர் பலிக்கும் அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரே பொறுப்பு, என தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக ஏற்கனவே ட்விட்டரில் தமிழக முதல்வருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாய் வரை மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுவரை வாங்கியுள்ளதாகவும், ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்ததனர்.
எனவே, தமிழக அரசு இம்மருத்துவமனையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.