திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 1,233 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 1,233 ஆக அதிகரித்துள்ளது.
377 பேர் திருப்பூர் மற்றும் கோவையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்று ஒரே நாளில் 14 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், 4,314 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் 189 பேர் இன்று 14 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் 560 பேரிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நான்கு பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் விவரம்:
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுக்காடு பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண், திருப்பூரைச் சேர்ந்த 68 வயது ஆண் ஒருவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேலும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்ட 79 வயது ஆண் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், திருப்பூர்-கங்கயம் சாலையைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இன்று கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களின் விவரம்: