கோவை: கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த பேல்கன் ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்கள் மற்றும் நிறுவனங்களில் உடல் வெப்பநிலை அறிந்து கொள்ளும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்து உள்ளது.
கோவை: சட்டப் போராட்டத்தில் வென்று வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும், என நெகமத்தில் நடைபெற்ற விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் சின்ன நெகமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பெரிய நெகமம், சின்ன நெகமம் மற்றும் சந்திராபுரம் பகுதியில் உள்ள 53 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 27 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.
அதன்பின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் போது சட்டப் போராட்டத்தை முதல்வர் வெல்வார், வேதா இல்லத்தை நிச்சயமாக மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவிடமாக மாற்றப்படும், என கூறினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா ஐந்து முக கவசங்கள் வழங்கப்பட்டது.