ஆழியாரில் பழங்குடியின மாணவர்களுக்கு ஆறு ஆசிரியர் நியமிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் தொடங்கின

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாரில் மின்சார வசதியில்லாத பழங்குடியின மாணவர்களுக்கு, ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் இன்று தொடங்கின.

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாரில் மின்சார வசதியில்லாத பழங்குடியின மாணவர்களுக்கு, ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் இன்று தொடங்கின.

பொள்ளாச்சி வனச்சரக உட்பட்ட பகுதிகளில் நவமலை, சின்னாறு, சர்கார்பதி, கூமாட்டி, எருமை பாறை, உள்ளிட்ட 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மாணவர்களுக்காக அந்தந்த பகுதிகளில், உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.

கொரோனா நோய் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலுள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதில் சிக்கல் எழுந்தது. மின்சார வசதி, செல்போன், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாததால் பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் தவித்து வந்தனர்.

இதனால், அரசு பழங்குடியின மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பாடம் நடத்த வேண்டும், என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.



இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி அரசு தொடக்கப்பள்ளியில், நேற்று முதல் முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில், ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, 18 மாணவர்களுக்கு, தனித்தனி அறைகளில், சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...