கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையின் "கவச - தடுப்பூசி மையம்": குழந்தைகள் முதல் முதியோர் வரை தேவைப்படும் தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்படும்

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.








கோவை: நோய் வரும் முன் காப்பதே சிறந்ததாகும். அதன் அடிப்படையில் கோவை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை "கவச - தடுப்பூசி மையம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



கோவை அவிநாசி சாலை , பீளமேடு பகுதியில் உள்ள "பி எஸ் ஜி மை கிளினிகில்" ( PSG My Clinic) இந்த தடுப்பூசி மையம் செயல்படவுள்ளது. இந்த கவச திட்டமானது, பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள அனைவரும் அந்தந்த வயதிற்கு, அந்தந்த கால கட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை இட்டு நலமுடன் வாழ உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டமாகும்.

இது குறித்து பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் Dr.J.S.புவனேஸ்வரன் அவர்கள் கூறுகையில்:

உலகில் பெருகி வரும் நோய்களுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளே பல பெரிய வியாதிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த "கவச" தடுப்பூசி மையத்திற்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சென்று அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகள் பற்றி மருத்துவரிடம் கேட்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வகையான தடுப்பூசிகளும் இந்த "கவச" மையத்தில் போடப்படும்.

இந்த தடுப்பூசி மையமானது அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள "பி எஸ் ஜி மை கிளினிக்-ல்" செயல்பட உள்ளது. நோய் வரும் முன் காப்பதே சிறந்ததாகும். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த "கவச" தடுப்பூசி மையம் பல்வேறு நோய்களிடமிருந்தும் பாதுகாக்கும் கவசமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள 82200 99352 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...