ஆனைமலை மலைவாழ் பகுதிகளுக்கு ரேசன் பொருட்கள் எடுத்து சென்ற லாரி சேற்றில் சிக்கியது: சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசு மூலமாக வழங்கக்கூடிய விலையில்லா ரேஷன் அரிசி, பருப்பு என பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. வால்பாறையில் உள்ள கிடங்கிலிருந்து, பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யபட்டு வருகிறது.

தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதால் மலைவாழ் மக்கள் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மேலும் குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் போது சேற்றில் சிக்கி விபத்துக்கள் நடக்கின்றன.



இந்த நிலையில், நேற்று கீழ்பூணாச்சி செட்டில்மெண்டுக்கு ரேஷன் பொருள் கொண்டு சென்ற லாரி, மண் சாலையில் செல்லும் பொழுது சேற்றில் சிக்கியது.



அக்குடியிருப்பில் இருந்த மலைவாழ் மக்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி சேற்றில் சிக்கிய லாரியை மீட்டனர்.

இது குறித்து, மலைவாழ் மக்கள் கூறுகையில்:

மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எங்கள் பகுதிகளுக்கு காட்டு வழி பாதையில் வரும் பொழுது சேற்றில் சிக்கி விடுகிறது. சில சமயங்களில் ரேஷன் பொருட்கள் வந்து சேர முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், காட்டுப்பகுதியில் வாழும் எங்களுக்கு உணவுப் பொருட்கள் இல்லாமல் சில சமயங்களில் மிகுந்த சிரமப்பட்டு உள்ளோம், என தெரிவித்தனர்.

இதனால், தமிழக அரசு அவர்கள் வாழும் பகுதிகளை இணைக்கும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...