கோவையில் எளிமையான முறையில் கொண்டாடப்பட உள்ள 74வது சுதந்திர தினம்.
கோவை: வருடம் தோறும் சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமரும் அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றி நல திட்ட உதவிகள் வழங்குவது வழக்கமான நிகழ்ச்சிகளில் ஒன்று.
ஆனால், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல் போன்றவைகள் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக தவிர்க்கபட இருப்பதாகவும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார்.
கொடியேற்றதிற்கு பின் காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ளும் மாவட்ட ஆட்சியர், கொரோனா கால கட்டத்தில் தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியில் ஈடுபட்டவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கவுரவிக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.