ரேசன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டத்திற்காக கோவைக்கு அனுப்பப்பட்ட  முக கவசங்கள் தரமற்றவை என்று திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

ரேசன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டத்திற்காக கோவை வந்த 70 ஆயிரம் முககவசங்கள் தரமற்றவை என கூறி அதிகாரிகள் அதனை திருப்பி அனுப்பியுள்ளனர்.

கோவை: ரேசன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டத்திற்காக கோவை வந்த 70 ஆயிரம் முககவசங்கள் தரமற்றவை என கூறி அதிகாரிகள் அதனை திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் ரேசன் கார்டில் உள்ளகுடும்ப உறுப்பினர் ஒருவருக்குதலா 2 முகக்கவசம் வீதம் அனைவருக்கும் இலவச முககவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 9 லட்சம் ரேசன்கார்டு தாரர்களுக்கு 82 லட்சம் முகக்கவசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 1 லட்சத்து 50 ஆயிரம் முகக்கவசங்கள் கோவை வந்தடைந்தன. இதில் 70 ஆயிரம் முகக்கவசம் போதிய தரமில்லை என்று கூறி திருப்பி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: 

கோவை மாவட்டத்தில் உள்ள 1,442 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்ளுக்கு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.இந்த முகக்கவசங்களின் தரம் குறித்துகைத்தறி துறையினர் பரிசோதனை செய்து எங்களிடம் வழங்குவார்கள். கோவைக்கு முதற்கட்டமாக தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் முகக்கவசம் வந்தன. இதில், சுமார் 70 ஆயிரம் முகக்கவசம் போதிய தரமின்றி உள்ளதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...