கோவையில் ஞாயிறு  ஊரடங்கு நாளில் ஜோராக நடைபெற்ற மது விற்பனை..!

கோவையில் ஞாயிறு  ஊரடங்கு நாளில் ஜோராக நடைபெற்ற மது விற்பனை..!

கோவை: கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஞாயிறன்று எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை தடாகம் பகுதி அருகே உள்ள கோவில்மேடு மதுபான கடையில் நூற்றுக்கும் மேற்பட்டடோர் ஒரே இடத்தில் அமர்ந்து மது அருந்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்திலும் பல இடங்களில் விதிகளை மீறி மது விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அதை உறுதிபடுத்தும் வகையில் இன்று கோவை தடாகம் சாலையிலுள்ள மதுபான கடை எண் 1625 யில் மது பிரியர்களின் கூட்டம் இன்று அலைமோதியது. 

கொரொனா தொற்று காரணமாக மதுபானம் விற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், கோவையில் தடையை மீறி ஊராடங்கின் போது நூற்றுக்கும் மேற்பட்டடோர் டாஸ்மாக்கில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை ஊடகங்கள் வீடியோ எடுப்பதை அறிந்த கடை ஊழியர்கள் உடனடியாக மதுபான கடைக்கு செல்லும் கதவை முடிவிட்டு, உள்ளே விளக்கையும் அனைத்தனர். 

இதனையடுத்து, உள்ளே மது அருந்தி கொண்டிருந்தவர்கள்செய்வதறியாது உள்ளேயே சுற்றி சுற்றி வந்தனர். 

கோவை மாவட்டத்திலேயே கள்ள மதுபான விற்பனையில் இந்த கடையின் பங்கு பெரியளவில் இருப்பதாகவும்,அருகிலேயே காவல் துறை சோதனைச்சாவடி இருந்தும் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...