கோவை போளுவாம்பட்டி  வனப்பகுதியில் நோய் வாய்ப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை..!

கோவை போளுவாம்பட்டி வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்ட போது அங்குள்ள காப்புக்காட்டில் முள்ளாங்காடு அருகே பெண் யானை ஒன்று நகர முடியாமல் மயங்கிய நிலையில் தரையில் கிடந்திருப்பதை கண்டனர்.

இந்த தகவல் உடனே வன மருத்துவருக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த யானைக்கு 10 முதல் 12 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. 



கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர். ஐ. அன்வர்தீன் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர், டி வெங்கடேஷ் மேற்பார்வையில் வன கால் நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வடவள்ளி கால் நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கபட்ட காட்டு யானை மிகவும் பலவீனம் அடைந்து நீர் சத்து இல்லாமல் இருந்துள்ளது எனவும்,

அதனால் தான் மயங்கி கீழே விழுந்திருக்கும் என்றனர். 



அந்த யானைக்கு ஆண்டிபாயடிக்ஸ், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்த குளுக்கோஸ் மருந்துகளை வழங்கியுள்ளோம், என்று தெரிவித்தனர்.

அந்த யானையை வன ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது,முன்னேற்றம் அடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...